Connect with us

‘வாரிசு’ தயாரிப்பாளருக்கு கிடைத்த வாரிசு! டைட்டில் உண்மையானது!

Dil Raju next with Vamsi and Vijay

பொழுதுபோக்கு

‘வாரிசு’ தயாரிப்பாளருக்கு கிடைத்த வாரிசு! டைட்டில் உண்மையானது!

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார்.இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இப்படத்தினை, பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி முதன்முறையாக இயக்குநராக அறிமுகமான பிரபாஸின் ’முன்னா’ படத்தை தில் ராஜுதான் தயாரித்தார். வம்சி இயக்கத்தில் வெளியான ராம் சரண் – அல்லு அர்ஜுனின் ‘யுவடு’ படத்தையும், மகேஷ் பாபுவின் ‘மகரிஷி’ படத்தையும் தில் ராஜுதான் தயாரித்தார்.

 

dil raju second marriage photos 1589194909

தெலுங்கு திரையுலகில் பிரபலமான தயாரிப்பாளர் தில் ராஜுன் மனைவி அனிதா 2017ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார் . மேலும் அவர்களுக்கு ஹன்ஷிதா ரெட்டி எனும் மகள் இருக்கிறார்.அடுத்ததாக கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி மறுமணம் செய்து கொண்டார் தில் ராஜு.

இரண்டவதாக தன்னை விட மிகவும் குறைந்த வயதுடைய தேஜஸ்வினி என்கிற வைகா ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

தற்போழுது கர்ப்பமாக இருந்த தில் ராஜூவின் மனைவி வைகா ரெட்டிக்கு நேற்று காலை ஐதராபாத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து தெலுங்கு திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

images 2022 06 29T230603.244 1

விக்ரம் படம் ஓடிடி ரிலீஸ்! ரசிகர்களை ஈர்க்கும் துப்பாக்கிகளுடன் புரொமோவா?

விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கும் போதே தயாரிப்பாளருக்கு ஆண் வாரிசு பிறந்ததால் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

1656505197462

இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் இணையும் ‘ராம் சரண் 15’ படத்தையும் தில் ராஜுதான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top