உத்தரகாண்ட் பனிச்சரிவு: 26 பயிற்சி வீரர்கள் உடல்கள் மீட்பு!!

உத்தரகாண்ட் மாநிலம் டோக்ரானி பாமாக் மலைப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பனிச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் பனிச்சரிவில் சிக்கி சுமார் 29 பேர் போனதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் தீயணைப்பு துறையினர் மற்றும் இராணுவ வீரர்கள் மூலம் தேடும் பணியானது தீவிரமான தொடங்கியது. அதே சமயம் உடல்களை மீட்கும் பணியானது சவாலாக இருந்ததாக தெரிவித்தனர்.

அமைதிக்கான நோபல் பரிசு: மனித உரிமை வழக்கறிஞக்கு அறிவிப்பு..!!

குறிப்பாக வானிலை மிக மோசமாக இருந்ததால் உடல்களை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இன்றைய தினத்தில் ALH ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் பணியில் இறங்கினர்.

தற்போது சுமார் 26 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்களது உடல்கள் 108 ஆம்புலன்ஸ் சேவையில் இருந்து உத்தரகாசிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வாழ் இந்திய குடும்பத்தினர் படுகொலை: ஒருவர் கைது.!!

மேலும், மீதமுள்ள 3 மலையேறும் பயிற்சி வீரர்களை தேடும் பணியானது தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment