காளிதாஸன் படைத்த உத்தரகாலாம்ருதம் பூர்ணகாலாம்ருதம்

811dd167636fe5fe05b0bf7b82c774bf-2
விக்ரமாதித்தன் அரசவையில் இடம்பெற்றிருந்தவர் தான் மஹாகவி காளிதாஸர். 

காளிதாஸரின் கதை அனைவருக்கும் தெரிந்திருக்கலாம்.  காளிதாஸர் ஒன்றுமே அறியாத முழு மூடனாக இருந்தார். அனைத்தையும் கற்று விட்டோம் என்று மமதை கொண்ட ராஜகுமாரியின் ஆணவத்தை அடக்க அரசவையில் இருந்த பண்டிதர்கள் ஒரு பெரும் சூழ்ச்சியில் ஈடுபட்டனர். அவர்கள் ஒரு நாள் மரத்தின் நுனியில் உட்கார்ந்தவாறே அடி மரத்தை வெட்ட முனையும் முழு மூடனான காளிதாஸைப் பார்த்து தமது சூழ்ச்சியை நிறைவேற்றுவதற்கான சரியான நபர் அவனே என்று தீர்மானித்து அவனிடம் எதுவும் பேச வேண்டாம்; அரசகுமாரியின் முன்னர் சைகைகளாலேயே எதையும் சொல்; பொன்னும் பொருளும் மிக்க வாழ்க்கை உண்டு” என்று கூறி அவனை அழைத்துச் சென்றனர். அரசகுமாரி கேள்விகளைக் கேட்க காளிதாஸன் மனம் போனபடி சைகைகளைக் காட்ட அதற்கு அரசவை பண்டிதர்கள் அற்புதமான வியாக்யானம் தந்தனர். வியந்து போன ராஜகுமாரி காளிதாஸனை மணமுடித்தாள், ஆனால் முதல் இரவிலேயே காளிதாஸனின் ‘புலமை’ அவளுக்குத் தெரிந்தது தான் எப்படிப்பட்ட சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டோம் என்பதும் அவளுக்குப் புரிந்தது.

காளிதாஸன் மஹாகாளியின் அருள் பெற்றவர் ஆவார். காளிதாஸனின் வரலாறை ஓரளவு புரிந்து கொள்ள வேண்டும் என்றால். நடிகர் திலக சிவாஜிகணேசன் நடித்த மஹாகவி காளிதாஸ் திரைப்படம் பார்க்க வேண்டும். அதில் அவரின் வரலாறு புலப்படும்.

மஹா காளியின் அருளால் பல்வேறு நூல்களை காளிதாஸர் படைத்தார்.

மஹாகவி காளிதாஸர் பல்வேறு இலக்கிய நூல்கள் எழுதி இருந்தாலும் அவர் எழுதிய உத்தரகாலாம்ருதம், பூர்ணகாலாம்ருதம் என்ற இரண்டு ஜோதிட நூல்கள் புகழ்பெற்றது. இன்று வரை வந்த பல்வேறு ஜோதிட நூல்களுக்கு இது மூலாதாரமாக உள்ளதாக இது போற்றப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews