Connect with us

நாட்டிலேயே பாதுகாப்பான மாநிலம் உத்தர பிரதேசம் தான்: யோகி ஆதித்யநாத் காரசார பேச்சு!!

201904111155289154 Congress Infected By Green Virus Yogi Adityanath s Latest SECVPF

News

நாட்டிலேயே பாதுகாப்பான மாநிலம் உத்தர பிரதேசம் தான்: யோகி ஆதித்யநாத் காரசார பேச்சு!!

நாட்டிலேயே பாதுகாப்பான மாநிலம் உத்தர பிரதேசம் தான்: யோகி ஆதித்யநாத் காரசார பேச்சு!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலானது நாளை மறுநாள் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் உத்தரப் பிரதேச முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் தனது ஆட்சிக்கு வாக்குகளை சேகரிக்க தெஹ்ரி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது நாட்டிலேயே பாதுகாப்பான மாநிலம் உத்தர பிரதேசம் தான். நாட்டின் பாதுகாப்பில் பாஜக எந்த விதத்திலும் சமரசம் செய்யாது எனவும் உத்தரகாண்ட் மாநிலமும் அவ்வாறு ஆக வேண்டும் என தெரிவித்தார்.

இந்த மாநிலத்தில் கிரிமினல்களும், ரவுடிகளும் நுழைந்துவிடுவார்களோ என்று பயமாக இருப்பதாகவும் உ.பி.யைப் போல் பாதுகாப்பான மாநிலமாற்றி இந்து என சொல்வது நாம் பெருமை கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், இந்து என்பது வகுப்பு வாத வார்த்தை கிடையாது. அது ஒரு கலாசார வார்த்தை. இந்தியாவில் உள்ள நம்பிக்கை என்னவோ அதை எதிர்ப்பதில் எப்போதும் காங்கிரஸ் கவனமாக இருக்கும். அதனால்தான் அவர்கள் ராமர் கோயிலை கட்டுவதை எதிர்த்தனர் என தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top