இந்தியாவில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
இதிலும் குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஏற்கனவே முதலாம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. ஐம்பத்து எட்டு தொகுதிகளுக்கு நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தினை பல அரசியல் கட்சிகள் குறிவைத்து தேர்தல் வாக்குறுதிகளை அளித்து கொண்டு வருகின்றனர். ஏனென்றால் அங்கு தற்போது பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இருப்பினும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் கட்சி உள்ளிட்டோர் தங்களது அதி தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேசத்தைப் பற்றி வேதனையான பதில் கூறியுள்ளார். அதன்படி குற்ற செயல்களில் உத்தரபிரதேசம் மாநிலம் தான் இந்தியாவில் முதல் மாநிலம் என்று அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டை வைத்தார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலும், போலி என்கவுண்டர்களிலும் உத்தரபிரதேச மாநிலம் தான் முதலில் உள்ளது என்று அகிலேஷ் யாதவ் கூறினார். ஹதராஸ் மற்றும் லக்கிம்பூர் கேரியில் யோகி அரசின் காவல்துறை எப்படி நடந்து கொண்டது? என்று அகிலேஷ் யாதவ் கேள்வி கேட்டார்.