உத்தரபிரதேச முதல்வர் போட்டியிடும் தொகுதி-முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

அடுத்த மாதத்திற்கான பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக உத்தரபிரதேச மாநில மக்கள் எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டுள்ளனர். ஏனென்றால் அடுத்த மாதம் உத்தர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

அங்கு உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஏழு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்னர் ஆளும் பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக உத்தரபிரதேசத்தில் காணப்படுகிறது.

ஏனென்றால் பாஜக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் உள்ள எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தொடர்ந்து தங்களது பதவியை ராஜினாமா செய்து வந்தனர். இதன் மத்தியில் ஆளும் கட்சியான பாஜக உத்தரபிரதேசத்தில் முதல்கட்ட வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.

அதில் தற்போதைய உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். துணை முதல்வர் கேசவ பிரசாத் சிரத் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக பாஜக சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட பாஜக வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 58 தொகுதிகளில் 57 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment