உ.பி.யில் கொடூரம்! 6 துண்டுகளாக வெட்டி கிணற்றில் வீசிய கொடூர காதலன்!!

உ.பி-யில் தன்னுடைய காதலியை 6 துண்டுகளாக வெட்டி கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவ.16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பஷ்சிம் பட்டி கிராமத்தில் உள்ள கிணற்றில் துண்டு துண்டாக பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் நடித்திய விசாரணையில் உயிரிழந்து இருப்பது ஆராதனா பிரஜாபதி என்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

தங்கம் விலை மீண்டும் சரிவு: எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில் பெண்ணின் மர்ம மரணத்தை கண்டறிவதற்காக அவரது முன்னாள் காதலன் பிரின்ஸ் யாதவை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில் ஆராதனாவும், யாதவும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த சூழலில் ஆராதனா வேறு நபரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கடந்த நவ.9 தேதி ஆராதனா வீட்டிற்கு சென்று யாதவ் கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் ஆத்திரத்தில் காதலியின் கழுத்தை நசுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் கொலையை மறைக்க யாதவ் தனது குடும்பத்துடன் சேர்ந்து 6 துண்டுகளாக வெட்டி கிணற்றில் வீசியதாக தெரிவித்துள்ளார்.

தவறான ஆபரேஷன்! அழுகிய இடது கை… கேரளாவில் சோகம்!!

மேலும், தலைமறைவாக உள்ள குடும்பத்தினரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.25,00 சன்மானம் வழங்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.