உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்: 80%-க்கும் 20%-க்கும் நடக்கும் யுத்தம்! முதல்வரின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்;

நம் நாட்டில் அதிக அளவில் கலவரம் நடைபெறும் மாநிலமாக காணப்படுவது உத்தரபிரதேசம் தான். அங்கு பெரும்பாலும் மதக்கலவரங்கள் அதிகமாக நடைபெறும். இந்த சூழலில் உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

cpi

 

தற்போது அங்கு முதல்வராக உள்ளார் ஆதித்யநாத். இந்த நிலையில் உத்தர பிரதேசத்தின் தற்போதைய முதல்வர் ஆதித்யநாத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாட்டில் மதபிளவை ஏற்படுத்தும் வகையில் உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளதாக மார்க்சிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் என்பது 80%க்கும் 20%க்கும் நடக்கும் யுத்தம் என்று யோகி ஆதித்யநாத் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேச முதலமைச்சர் ஆதித்தியநாத் மீது தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆதித்யநாத் பேச்சை குறிப்பிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தி உள்ளார். வாக்காளர்களை மதரீதியில் அணிதிரட்டும் ஆதித்யநாத் பேசியிருப்பது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல் என்றும் அவர் கூறினார். உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை ஆணையம் உறுதி செய்ய யெச்சூரி கோரிக்கை வைத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment