முகநூலில் மூழ்கும் பெண்களே உஷார்: 20 நாட்கள் பழக்கத்தால் நடந்த விபரீதம்!!

கள்ளகுறிச்சியை அடுத்த எடுத்தவாய் நத்தம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. இவர் போட்டோ ஸ்டுடியோ ஒன்று நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் ரோடு மாமநத்தம் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருடன் முகநூலில் நண்பராக   பழகி வந்துள்ளார் . செல்வம் உடன் 20 நாட்களே பழகிய நிலையில் திம்மலை வனப்பகுதிக்கு சங்கீதா சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியா இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் சங்கீதாவின் கழுத்தில் கத்தியை வைத்து 11 சவரன் நகைகளை பறித்தனர்.

இந்நிலையில் சங்கீதா மற்றும் அவரது நண்பர் செல்வம் இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதில் முகநூலில் பழக்கம் ஏற்பட்ட செல்வத்தை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது  செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் ஆகிய மூவரும் வழிபறி கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டது அம்பலமானது. அவர்களிடமிருந்து 8 சவரன் நகைகளை கைப்பற்றிய போலீசார் மூன்று நபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment