Connect with us

உடைகள் ஆர்டர் செய்த இளைஞருக்கு பார்சலில் வந்த புழுக்கள்: ஆன்லைன் பரிதாபம்

News

உடைகள் ஆர்டர் செய்த இளைஞருக்கு பார்சலில் வந்த புழுக்கள்: ஆன்லைன் பரிதாபம்

a3651749b7655ac679df8ceb20e80014

தற்போதைய காலத்தில் உணவு முதல் தங்க நகைகள் வரை ஆன்லைனில் ஆர்டர் செய்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஆன்லைன் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த ஆன்லைனில் பதிவு செய்வதில் ஒரு சில குழப்பங்களும் வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது

அந்த வகையில் நியூயார்க்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு ஆசை ஆசையாக உடைகளை ஆர்டர் செய்தார். ஆனால் அந்த பார்சலை அவர் பிரித்து பார்த்தபொழுது உடைகளுடன் புழுக்களும் நெளிந்து கொண்டு இருந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்

நியூயார்க்கை சேர்ந்த பெஞ்சமின் என்ற இளைஞர் ஆன்லைன் மூலம் விதவிதமான உடைகளை ஆர்டர் செய்தார். இந்த உடைகள் அவருக்கு டெலிவரி செய்யப்பட்டன. ஆசையுடன் தனது உடைகளை பார்ப்பதற்காக அவர் பார்சலை பிரித்து பார்த்தபோது உடைகளுடன் சேர்ந்து 20க்கும் மேற்பட்ட புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன

பார்சல் மிகவும் பக்காவாக பேக்கிங் செய்யப்பட்டிருந்ததால் இந்த புழுக்கள் ஷிப்பிங்கின் போது உள்ளே சென்றிருக்க வாய்ப்பில்லை என்றும் பார்சல் செய்வதற்கு முன்பே அந்த அட்டைப் பெட்டியில் புழுக்கள் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது

இதுகுறித்து ஆன்லைன் நிறுவனத்திற்கு பெஞ்சமின் மெயில் அனுப்பி உள்ளதை அடுத்து அவரது பணத்தை திரும்ப தரவும், அவர் ஆர்டர் செய்த பொருளை திருப்பிப் பெற்றுக் கொள்வதாகவும் ஆன்லைன் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதையும் பெஞ்சமின் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். உடைகள் ஆர்டர் செய்த இளைஞருக்கு புழுக்களுடன் கூடிய உடைகள் டெலிவரி செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top