சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது அமெரிக்கா !! பின்னணி என்ன ?
பொருளாதர தடைகளை தவிர்க்க ரஷ்யாவிற்கு சீனா உதவினால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா போன்ற பல்வேறு உலக நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யாவும் பல தடைகளை விதித்து வருகின்றன. இதனிடையே சீனாவின் உதவியை ரஷ்யா கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சீனா நேரடியாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ பொருளாதார தடைகளை தவிற்க ரஷ்யாவிற்கு உதவினால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிகை விடுத்துள்ளது.
பொருளாதர தடைகளில் இருந்து ரஷ்யாவை காப்பாற்ற எந்த நாடும் உதவுவதை அனுமதிக்க முடியாது என்றும் அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
