ரஷ்யாவுக்கு அமெரிக்கா பதிலடி : ஜோ பைடன் அதிரடி !!

உக்ரைன்  மீது  போர் தொடுத்துள்ள ரஷ்யாவிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்த நாட்டில் இருந்து கச்சாஎண்ணெய்  இறக்குமதிக்கு தடை விதப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடர் தெரிவித்து இருப்பது சர்வதேச அமைப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சவுதி அரேபியாவிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது ரஷ்யா. இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து தினமும் அமெரிக்கா 7 லட்சம் பீப்பாய்களை இறக்குமதி செய்கிறது.

இதனிடையே  அமெரிக்காவின்  திடீர் அறிவிப்பால்  ரஷ்யாவில் பெரும் பொருளாதர சேதம் ஏற்படும் ஏற்படும்  நிலைமை   உள்ளது.  இந்த தடையில் எண்ணெய் மற்றும் எரிசக்தியும் அடங்கும். இதனால் உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த   அறிவிப்பால்  அமெரிக்காவில்   கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயரும் அபாயம் ஏற்ப்பட்டு  உள்ளது. போருக்கு முன்பே அமெரிக்காவில் 30 %உயர்ந்து வரும் நிலையில் தற்போது மேலும், உயரும் என அஞ்சப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment