உக்ரைன் செல்லும் அமெரிக்க அதிபர்: எதற்காக தெரியுமா ?

உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் நிலவி வந்தது. இதற்கு பல உலக நாடுகள் இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால் பெரும் பொருளாதர சேதம் ஏற்படும் என எச்சரித்து வந்தனர்.

ஆனால் வரம்பு மீறிய ரஷ்யா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது குண்டு மழை பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டில் பல அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் தலைநகர் கார் கீவில் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.

இதனிடையே தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸின் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இப்பயணத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் செல்வதாக தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment