News
இதுவரை 13 ஆயிரம் பேர் மீட்பு! அமெரிக்க அதிபர் அறிவிப்பு!!
தற்போது உலகமெங்கும் உள்ள அனைத்து நாடுகளிலும் முக்கிய செய்தியாக காணப்படுவது ஆப்காணிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி .சில தினங்கள் முன்பாக ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றியது. இதனால் பல நாட்டு மக்கள் தங்கள் நாடுகளுக்கு விரைந்து திரும்புகின்றனர். அதோடு மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் மக்களும் அவர்களோடு சேர்ந்து தப்பித்துக் கொள்வதும் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது.
மேலும் வெளிநாடுகளில் வாழும் ஆப்கானிய மக்கள் கூட தங்கள் தாய் நாடான ஆப்கானிஸ்தானுக்கு செல்வதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என்று காணப்படுகின்றனர். இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் எதிராக பல்வேறு முயற்சிகளை எடுத்து கொண்டே வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது அமெரிக்க அதிபர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதன்படி ஆப்கானில் இருந்து இதுவரை 13 ஆயிரம் பேர் மீட்கப்பட்டதாக கூறியுள்ளார். அதுவும் ஆகஸ்ட் 14ம் தேதி முதல் இதுவரை 13,000 பேர் மீட்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் கூறியுள்ளார். மேலும் ஆப்கானிஸ்தான் சிக்கியவர்களை மீட்பதே தற்போதைய முக்கிய பணி என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்பது வரலாற்றில் மிகவும் கடுமையான மீட்பு பணியாக இருக்கும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
