இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை !! பின்னணி என்ன?
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே 8 வது நாளாக போர் நடைபெற்று வரும் நிலையில் இதற்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்கா கொண்டு வந்த ஐ. நா தீர்மானங்களில் இந்தியா ஆதரவு அளிக்காமல் நடுநிலை வகிப்பதாக அறிவித்திருந்தது.
இதனால் இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு பலவீனம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் ரஷ்யா இந்தியாவிற்கு எஸ் – 400 ஏவுகணை தடுப்பு சாதனங்கள் வழங்கும் என உறுதியளித்தது.
இந்த எஸ் – 400 ஏவுகணை இந்தியாவில் இருந்தால் தெற்கு ஆசிய வான்வழி தாக்குதலில் இந்தியா முதலிடம் வகிக்கும் என்றும் பாகிஸ்தான் சீனா போன்ற பரப்புகள் அனைத்தும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இதற்கு அமெரிக்கா தரப்பில் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இதற்காக வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோபைடர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
