கடந்த சில நாட்களுக்கு முன்பு நம் தமிழகத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி வருகை புரிந்திருந்தார். அப்போது அவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றியினை தெரிவித்து இருந்தார்.
தமிழக அரசு நீதித்துறைக்கு பல்வேறு விதமான உதவிகளையும் செய்து கொண்டு வருவதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு தகவல் அளித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்போது தமிழகத்தில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் என்று மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் உச்சநீதிமன்ற கிளை அமைத்தல், தமிழை வழக்காடு மொழியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் அமையவேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். நீதிபதிகளை நியமிப்பதில் சமூக பன்முகத்தன்மை, சமூக நீதியைப் பேணும் வகையில் மாற்றம் தேவை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
உச்சநீதிமன்றத்தின் கிளைகளை சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லியில் அமைக்கவேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தையும், நீதியையும் சாமானிய மக்களுக்கு புரிய வைப்பது நீதி வழங்கல் அமைப்பின் கடமை என்றும் கூறினார். தமிழை வழக்காடு மொழியாக்குவதில் உள்ள சிரமங்களை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சரிசெய்துவிட முடியும், நான் வைத்த கோரிக்கைகள் எதிர்காலத்தில் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் கூறியுள்ளார்.