முடிவெடுக்காத ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தல்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விசிக!

எதிர்பார்க்கப்பட்டபடி இன்று காலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த அனைத்து கட்சி கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, பாஜக, பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காங்கிரஸ் போன்ற ஏராளமான கட்சியின் சார்பில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர்.

அதில் தமிழக அரசின் நீட் தேர்வுக்கு எதிராக செயல்படும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக, பாமக உறுதுணையாக இருக்கும் என்று கூறியிருந்தது. அதே வேலையில் நீட் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி கூட்டத்தில் இருந்து பாரதிய ஜனதா கட்சி வெளிநடப்பு செய்தது.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.அதன்படி நீட் மசோதா தொடர்பாக முடிவெடுக்காத ஆளுநரை திரும்பப்பெற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

நீட் தேர்வு பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தை கட்சி கோரிக்கை வைத்துள்ளது. தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment