சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தல்!: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்;

உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற வேலை என்றால் அதனை மீன்பிடித் தொழிலையே கூறலாம். ஏனென்றால் கடலுக்குள் செல்லும் பல மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கி கொல்லப்படுகின்றனர். ஒருசில மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைக் கைதிகளாக பிடித்துச் செல்கின்றனர்.

இலங்கை கடற்படையால் சிறை கைதிகளாக பிடிக்கப்பட்டு மீனவர்களை விடுவிக்கக் கோரி ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பலரும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்பார்கள். அதன் தொடர்ச்சியாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி உள்ளார்.

அதன்படி சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக்கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கடற்படை கைது செய்துள்ள 68 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இலங்கை கடற்படை சிறை பிடித்து உள்ள 75 படகுகளை விடுவிக்கவும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment