பஸ்களில் ஆண்கள் சில்மிஷால் செய்தால் அவசர பட்டன்: சென்னை பேருந்துகளில் சிறப்பு வசதி!

பேருந்துகளில் பெண்கள் மீது உரசி ஆண்கள் சில்மிஷம் செய்தால் அவசர பட்டனை அழுத்தும் என்ற புதிய வசதி சென்னை மாநகரப் பேருந்துகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை நகரில் இயக்கப்படும் பேருந்துகளில் பல்வேறு புதுப்புது வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வரும் நிலையில் பெண்கள் மீது ஆண்கள் உரசி சில்மிஷம் செய்யும் நிகழ்வை தடுப்பதற்காக தற்போது சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை நகரில் இயங்கும் 1200 மாநகரப் பேருந்துகளில் அவசர பட்டன்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் பேருந்தில் பெண்களை ஆண்கள் உரசினாலோ அல்லது பாலியல் தொல்லை கொடுத்தாலோ இந்த அவசர பட்டனை அழுத்த வேண்டும். அதன் மூலம் அந்த நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

இது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் இன்றும் நாளையும் மாநகர போக்குவரத்து கழகத்தால் நடத்தப்பட்டு உள்ளது என்றும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் உள்பட பல இடங்களில் இந்த அவசரப்பட்டனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த பட்டனை அழுத்தினால் அது எவ்வாறு செயல்படுகிறது? அதன்பின் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது போன்ற தெரு நாடகம் நடத்திக் காண்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நாளையும் நடத்தப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.