Connect with us

12000 பிரதிநிதிகள் கலந்து கொள்ள சீரும் சிறப்புமாக தொடங்கியது நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு!!

stalin1 1611986058

தமிழகம்

12000 பிரதிநிதிகள் கலந்து கொள்ள சீரும் சிறப்புமாக தொடங்கியது நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு!!

ஒவ்வொரு நாளும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு விதமான நலத்திட்டங்களை அறிவித்துக் கொண்டு தமிழக மக்களிடையே வரவேற்பினை பெற்றுக் கொண்டு வருகிறார்.

அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதன் மத்தியில் கட்சியின் தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்களிடையே அவ்வப்போது கடிதத்தின் வாயிலாகவும் பேசிக்கொண்டு வருகிறார். மேலும் கட்சியினை வலுப்படுத்தும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அதன் எதிரொலியாக இன்றைய தினம் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு தொடங்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நாமக்கல் அருகே பொம்மைக்குட்டைமேட்டில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. மேயர், நகர்மன்ற தலைவர் உட்பட 12000 நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்று உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top