தமிழகத்தில் வருகின்ற 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் 36-வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் மர்மமான முறையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.
மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலில் தோல்வியை சந்தித்து விடுவோமோ என பயத்தில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் காஞ்சிபுரம் 36 வது வார்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப் படுவதாகவும், பின்னர் தேர்தல் அறிவிக்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.