தமிழ்நாட்டில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் மே இரண்டாம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இவ்வாறு இருந்தாலும் தமிழகத்தில் தற்போது வரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒன்று நடைபெறவே இல்லை.
இதனால் தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு கட்சி சார்பிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
அதோடு மட்டுமில்லாமல் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 32 வார்டுகள் பட்டியலினத்தாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு உள்ளநிலையில் ஹைகோர்ட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக முறையீடு செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது என ஹைகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தலை நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும் என்று மனுதாரரின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
எந்த நேரத்திலும் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடத்தப்படுவதால் எந்நேரத்திலும் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் நக்கீரன் தரப்பில் வழக்கறிஞர் முறையீடு செய்துள்ளார். வழக்கை நாளை மறுநாள் விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தகவல் அளித்துள்ளனர்.