Connect with us

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்-இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு! மாலை 3 மணிக்குள் வேட்பு மனுவை வாபஸ் பெறலாம்;

vote 1280

Tamil Nadu

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்-இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு! மாலை 3 மணிக்குள் வேட்பு மனுவை வாபஸ் பெறலாம்;

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்-இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு! மாலை 3 மணிக்குள் வேட்பு மனுவை வாபஸ் பெறலாம்;

நம் தமிழகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிற தேர்தலாக மாறியுள்ளது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல். ஏனென்றால் பல ஆண்டுகளாக நம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலானது கடந்த வெள்ளிக்கிழமையோடு நிறைவுபெற்றது.

வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்ற அடுத்தநாளே வேட்புமனு பரிசீலனையும் தொடங்கியது. அதில் ஒருசில வேட்பாளர்களின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுகிறது. இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பின்பு சின்னம் ஒதுக்கும் பணியும் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 36,361 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனுக்களை இன்று மாலை 3 மணி வரை திரும்ப பெற்றுக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top