நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஒரே கட்டமாக நடத்த திமுக-அதிமுக இணைந்து கோரிக்கை!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கும் தேதி ஜனவரி 21-ம் தேதி அதாவது நாளை மறுநாள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களையும் ஒரே கட்டமாக நடத்தலாமா? என்று அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தமிழகத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இணைந்து கோரிக்கை வைத்துள்ளனர்.
அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என திமுக, அதிமுக வலியுறுத்தியுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, அதிமுக கோரிக்கை வைத்துள்ளது.
மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 11 கட்சிகள் பங்கேற்றுள்ளன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த கோரிக்கை வைத்துள்ளனர்.
திமுக சார்பில் கிரிராஜன், அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். நியாயமான நேர்மையான தேர்தல் நடக்கும் என நம்புகிறோம் என்று கிரிராஜன் கூறியுள்ளார்
