நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை மறுநாள் அறிவிப்பு! தேர்தலை ஒரே கட்டமாக நடத்தலாமா?
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று உள்ளது. ஆனால் எப்போது தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மக்கள் பலரும் கேள்வி எழுப்பிக் கொண்டே வருகின்றனர். இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி ஜனவரி 21ம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை மறுநாள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடத்தலாமா? என அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி ஜனவரி 21ஆம் தேதி அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்தி முடிக்கவும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது எனவும் தகவல் கிடைத்துள்ளது.
