நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து முடித்துள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மெகா வெற்றியை பதிவு செய்துள்ளன. இந்த முறை அம்மா – மகன், மனைவி – கணவன், மாமியார் – மருமகள் என அசத்தலான குடும்ப காம்போ வெற்றிகள் கவனம் ஈர்த்துள்ளன.
- மதுரை அலங்காநல்லூர் பேரூராட்சியில் கணவன் – மனைவி வெற்றி பெற்றுள்ளனர். அலங்காநல்லூர் பேரூராட்சியில் அடுத்தடுத்த வார்டுகளான 4 மற்றும் 5ல் போட்டியிட்ட கணவன் கோவிந்தராஜ், மனைவி ரேணுகா ஈஸ்வரி இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி பேரூராட்சியில் போட்டியிட்ட தம்பதியும் வெற்றி வாகை சூடியுள்ளனர். 9வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட புவனேஸ்வரியும் 12வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட நாச்சிமுத்துவும் வெற்றி பெற்றுள்ளனர்.
- மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியின் 8 மற்றும் 13வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட தாள் வள்ளிமயில் மற்றும் மகன் மருதுபாண்டியன் வெற்றி பெற்றுள்ளனர்.
- வாணியம்பாடி நகராட்சியில் 1 மற்றும் 10-வதுவர்டில் தி.மு.க சார்பாக களமிறங்கிய தாய்-மகன் உமா சிவாஜி கணேசன், சாரதிகுமார் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
- கோவில்பட்டி நகராட்சியில் 18 மற்றும் 27வது வார்டில் சிபிஎம் சார்பில் போட்டியிட்ட தாய் விஜயா மற்றும் மகன் ஜோதிபாசு வெற்றி பெற்றுள்ளனர்.
- விருதுநகரில் 26 மற்றும் 27 வார்டுகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மருமகள் சித்தேஸ்வரி மற்றும் மாமியார் பேபி வெற்றி வாகை சூடியுள்ளனர்.
- திருவாரூர் நகராட்சியில் 1 மற்றும் 2வது வார்டை அதிமுக சார்பில் போட்டியிட்ட கலியபெருமாள், மலர்விழி தம்பதி தன்வசமாக்கியுள்ளனர்.
- தென்காசி நகராட்சியில் 14 மற்றும் 15வது வார்டுகளில் அண்ணன், தங்கையான பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கனியை பறித்துள்ளனர்.
- ஸ்ரீவைகுண்டம் ஏரல் பேரூராட்சியில் அமமுக சார்பில் போட்டியிட்ட அப்பா, மகன், மகள் ஆகியோர் யாருமே எதிர்பார்க்காத வகையில் வெற்றி அடைந்துள்ளனர். 15வது வார்டில் தந்தை ரமேஷ், முதலாவது வார்டில் மகன் பால கெளதம், 2வது வார்டில் மகள் மதுமிதா ஆகியோர் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.