இன்று மாலை 6 மணியுடன் நிறைவு… விறுவிறுப்பாகும் தேர்தல் களம்!
தமிழ்நாட்டில், உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வீடு வீடாக சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன.
வரும் 19ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குகளை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படடுள்ளது. மேலும், வாக்குப்பதிவு நடைபெறும் நாளான வரும் 19ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இன்று மாலையுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைகிறது. இதையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் உச்சக்கட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் அறிவித்த அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி இந்த தேர்தல் நடைப்பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
