Connect with us

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மீண்டும் தொடங்கியது மறுவாக்குப்பதிவு!

vote 1280

தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மீண்டும் தொடங்கியது மறுவாக்குப்பதிவு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மீண்டும் தொடங்கியது மறுவாக்குப்பதிவு!

கடந்த வாரம் பிப்ரவரி 19ஆம் தேதி சனிக்கிழமை நம் தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் பிப்ரவரி 22ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

அந்த முடிவுகளில் பெரும்பாலும் திமுக வெற்றி பெற்றது. இருப்பினும் சனிக்கிழமை ஒரு சில வார்டுகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக பிப்ரவரி 21ம் தேதி திங்கட்கிழமை மறுவாக்குபதிவு நடைபெற்றது.

இந்த நிலையில் மீண்டும் தமிழகத்தில் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவை இன்றைய தினமே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. அதன்படி புவனகிரி பேரூராட்சி 4 வது வார்டில் இன்று மறுவாக்குபதிவு தொடங்கியுள்ளது.

வாக்கு எண்ணிக்கையின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானால் இன்றைய தினம் புவனகிரி பேரூராட்சி 4வது வாரத்தில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளே இன்றைய தினம் நடைபெறுகின்ற பதிவிலும் பின்பற்றப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top