நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்-2011 Vs 2022; அதிமுக-திமுக….! என்னென்ன மாற்றங்கள்?
நம் தமிழகத்தில் தற்போது தான் தேர்தல் களம் அமைதல் ஆக உள்ளது. ஏனென்றால் கடந்த வாரம் முழுவதும் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தான் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் ஆளும் கட்சியே அதிகளவு வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பற்றியும் சில தகவல்கள் கிடைத்துள்ளது.
அதிலும் குறிப்பாக திமுக-அதிமுக நேரடியாக போட்டி போட்டது பற்றிய புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி 2011-ம் ஆண்டில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 10 ஆக காணப்பட்டது. ஆனால் 2022ஆம் ஆண்டு 21 மாநகராட்சிகள் உள்ளன.
இதில் 2011ஆம் ஆண்டு அதிமுக 10 மாநகராட்சிகள் முழுவதையும் கைப்பற்றியது. நடைபெற்ற நகர்ப்புற தேர்தலில் திமுகவும் அதேபோல் மாநகராட்சிகள் முழுவதையும் தன் வசம் எடுத்துக் கொண்டுள்ளது.
மாநகராட்சி வார்டுகளின் அடிப்படையில் பார்த்தால் 2011ஆம் ஆண்டு அதிமுக 71.34 சதவீதம் பெற்றுள்ளது. அதேபோல் 2022ஆம் ஆண்டு மாநகராட்சி வார்டுகளில் திமுக 69.29 சதவீதம் பெற்றுள்ளது.
2011 ஆம் ஆண்டு நகராட்சிகளின் வார்டுகளின் அடிப்படையில் பார்த்தால் அதிமுகவிற்கு 45.66 சதவீத கிடைத்துள்ளது. அதே வேளையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி வார்டுகளின் அடிப்படையில் திமுகவிற்கு 65.46 சதவீதம் கிடைத்துள்ளது.
பேரூராட்சி வார்டுகளின் அடிப்படையில் பார்த்தால் அதிமுகவிற்கு 2011ஆம் ஆண்டு 35.28% கிடைத்தது. நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி வார்டுகள் அடிப்படையில் திமுகவிற்கு 57.59% கிடைத்துள்ளது.
