Connect with us

ஓ இதான் காரணமா! ரேஷன் அரிசி மூட்டைகளில் க்யூ ஆர் கோடு-தமிழக அரசு முடிவு!!

ரேஷன் அரிசி

தமிழகம்

ஓ இதான் காரணமா! ரேஷன் அரிசி மூட்டைகளில் க்யூ ஆர் கோடு-தமிழக அரசு முடிவு!!

எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டுமே ரேஷன் கடைகளில் இலவச அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது ஏழையிலேயே அவர்களுக்கு மிகவும் பிரயோஜனம் உள்ளதாக காணப்படுகிறது.

இருப்பினும் கூட ஒரு சில இடங்களில் ரேஷன் கடை அரிசிகள் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருவது தெரிகிறது, இந்த செயலில் ஈடுபடுபவர்கள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக ரேஷன் அரிசிகள் ஆந்திரா, கேரள மாநிலங்களுக்கு தான் அதிக அளவு கடத்தப்பட்டு வருகின்றன. எனவே இதனை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி ஆந்திரா, கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க மூட்டைகளில் க்யூ ஆர் கோடை அச்சிட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. குடோன்களில் இருந்து ரேஷன் கடைகளுக்கு செல்லும் அரிசி மூட்டைகளில் இந்த கோடு அறிமுகப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் அரிசி எந்த குடோனில் இருந்து கடத்தப்பட்டது என்று கண்டறிவதில் தாமதம் ஏற்படுவதால் தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது. கடந்த ஓராண்டில் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் 11091 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top