தன்னையே வைத்து சூதாடிய பெண்.. தோற்றதால் ஏற்பட்ட விபரீதம்!

மகாபாரதத்தில் தனது மனைவியை வைத்து சூதாடிய தர்மன் போல் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் தன்னையே பணயமாக வைத்து சூதாடி தோற்றதால் ஏற்பட்ட விபரீதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபக்கம் ஆன்லைன் ரம்மி விளையாட்டு பல உயிர்களை காவு கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் லூடோ என்ற விளையாட்டை பலர் விளையாடி வருகின்றனர்.

இந்த விளையாட்டில் ஒருவருக்கொருவர் பணம் வைத்து விளையாடுவது உண்டு. இந்த விளையாட்டு ஆன்லைனிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது/ இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டின் உரிமையாளரிடம் முதலில் விளையாட்டாக லூடோ விளையாடி உள்ளார்.

அதன் பிறகு அவர் பணம் வைத்து விளையாடி நிலையில் ஒரு கட்டத்தில் பணம் இல்லாததால் தன்னையே பணயமாக வைத்து விளையாடினார். அப்போது அவர் அந்த விளையாட்டில் தோற்று விட்டதால் வேறு வழியின்றி வீட்டு உரிமையாளருடன் தற்போது குடும்பம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாகி உள்ளார்.

இதனால் வெளியூரில் வேலை பார்த்த கணவர் இதுகுறித்து தகவல் அறிந்து உடனடியாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னையே பணயம் வைத்து சூதாடிய பெண் ஒருவர் தன்னையே இழந்து பரிதாபமாக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.