91% மதிப்பெண் பெற்ற 10ஆம் வகுப்பு மாணவி ஃபெயில்.. கல்வி நிறுவனத்தின் அலட்சியம்..!

உத்திர பிரதேசம் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி ஒருவர் 91% மதிப்பெண் பெற்றிருந்த போதும் அவர் தோல்வி அடைந்தார் என்று அறிவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில்  பத்தாம் வகுப்பில் 90% மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி என்ற பகுதியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பாவனா என்ற மாணவி 91.43% மதிப்பெண் பெற்ற போதிலும் அவர் தேர்வில் தோல்வி அடைந்தார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து அவர் அதிர்ச்சி அடைந்தார்

தான் தேர்வில் அனைத்து பாடங்களையும் நன்றாக தேர்வு எழுதி இருந்ததாகவும் தனக்கு 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் கிடைக்கும் என்று எதிர்பார்த்ததாகவும் ஆனால் தோல்வி அடைந்த தகவல் தனக்கு மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனை அடுத்து அவரது மதிப்பெண்களை மீண்டும் சரிபார்த்தப்பட்டபோது 70 மதிப்பெண் கொண்ட எழுத்து தேர்வில் ஹிந்தியில் 65 மதிப்பெண், ஆங்கிலம் கணிதம் மற்றும் சமூக பாடங்களில் 67 மதிப்பெண்கள், சமஸ்கிருதத்தில் 67 மதிப்பெண்கள் மற்றும் அறிவியலில் 58 மதிப்பெண்கள் பெற்றதாக தெரிகிறது. மொத்தத்தில் அவர் 420 மதிப்பெண்களுக்கு 384 மதிப்பெண் பெற்றுள்ளார். அதாவது 91.43 சதவீதம் மதிப்பெண்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டும் இன்றி நடைமுறை தேர்வில் 30க்கு 30 என்ற வகையில் ஆறு பாடங்களில் 180  மதிப்பெண் பள்ளியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது மதிப்பெண் பட்டியலில் நடைமுறை தேர்வில் 30 மதிப்பெண் என்று பதிவிடுவதற்கு பதிலாக 3 மதிப்பெண் என பதிவிட்டு ஆறு பாடங்களிலும் சேர்த்து அவர் 18 மதிப்பெண்களை பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவர் பெயில் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது

180 மதிப்பெண் நடைமுறை தேர்வில் வெறும் 18 மதிப்பெண்கள் என ஒரு ஜீரோவை மிஸ் செய்து விட்டதால் அவர் பெயில் என்று அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிய வருகிறது. இது நேரத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட கல்வி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.