Connect with us

நாட்டை உலுக்கிய உ.பி கொடூரம்..! அமைச்சர் மகனின் ஜாமினை தள்ளுபடி செய்ய பரிந்துரை..

976378 teruyt

தமிழகம்

நாட்டை உலுக்கிய உ.பி கொடூரம்..! அமைச்சர் மகனின் ஜாமினை தள்ளுபடி செய்ய பரிந்துரை..

நாட்டை உலுக்கிய உ.பி கொடூரம்..! அமைச்சர் மகனின் ஜாமினை தள்ளுபடி செய்ய பரிந்துரை..

உத்திரப்பிரதேசம், லக்கிம்பூர் கெரி பகுதியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி காரில் சென்று விவசாயிகள் மீது  மோதினார்.

இந்த சம்பவத்தில் நான்கு விவசாயிகள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த விவகாரம் நாடுமுழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே விவசாயிகள் உயிரிழந்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தலைமை நீதிபது என்.வி ரமணா முன் அமர்வுக்கு வந்தது.

அப்போது உத்திரபிரதேச அரசு சார்பில் வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி ஆஜரானார். வழக்கு விசாரணையின் போது அஜய் மிஸ்ரா ஜாமின் மனுவை ரத்து செய்ய சிறப்பு புலனாய்வு குழு கேட்டுக்கொண்ட  போதும் போலீஸ் தரப்பில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.

இதுதொடர்பாக உத்திரப்பிரதேச அரசின் தலைமை செயளாலருக்கு சிறப்பு புலனாய்வு குழு தகவல் தெரிவிக்கவில்லை என்று மகேஷ் ஜெத்மலானி தெரிவித்தார்.

இதனையடுத்து ஜாமீன் மனுவை ரத்து செய்யும்படி சிறப்பு புலனாய்வு குழு கேட்டுக்கொண்ட அறிக்கையின் நகலை உத்திர பிரதேச அரசுக்கு அனுப்பி வைக்குமாறு பதிவாளருக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top