புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு நடத்திய போது அங்கு இரட்டைக் குவளை முறை மற்றும் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு தடை போன்ற தீண்டாமை கொடுமை நடந்திருப்பது அம்பலமானது.
எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு.. புலம்பும் TTF வாசன்!
இந்நிலையில் பட்டியலின மக்கள் கோயிலுக்கு சாமி கும்மிட சென்ற போது கோயில் பூசாரியின் மனைவி சிங்கம்மாள் மற்றும் டீ கடையின் உரிமையாளர் மூக்கையா மீது SC/ST வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சூழலில் தங்களை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என குற்றவாளிகள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பொதுவான குழு அமைக்க உத்தரவிட்டு, அக்குழு ஊரில் சென்று சட்டம் – ஒழுங்கு சூழலை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என கூறிய நீதிபதி அறிக்கையின் அடிப்படையில் ஜாமின் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்து இருவரின் ஜாமின் மனுக்களையும் வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிபதி சத்யா தள்ளுபடி செய்தார்.