அடங்காத TTF வாசன்: காரை பறிமுதல் செய்த போலீசார்!!

சமூக வலை தளங்களில் ஒன்றாக கருதப்படும் யூடியூப் தளத்தில் தனக்கென ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் டிடிஎஃப் வாசன். அதன் படி, பல்வேறு விதமான வீடியோக்கள் மூலம் 2கே கிட்ஸ் மனதை கொள்ளையடித்தார்.

குறிப்பாக சினிமா பிரபலங்களை போலவே இவர் செல்லும் இடமெல்லாமல் ரசிகர்கள் கூட்டம் கூடுவது உண்டு. இவர் எங்கு சென்றாலும் இவரை காண ரசிகர்கள் ஆவலாக வருவார்கள். அதே சமயம் போக்குவரத்தி விதிமீறல்களில் ஈடுப்படுவதாக அவ்வப்போது போலீசாரிடம் சிக்குவது வழக்கம்.

நாளை இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்- வானிலை மையம் தகவல்!

அந்த வகையில் சென்னை கமலா தியேட்டருக்கு படம் பார்க்க காரில் வந்த டிடிஎஃப் வாசன் நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்ததால் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

இது குறித்து போக்குவரத்து காவலர் கேட்கும் போது தனக்கு ரசிகர்கள் தொல்லை அதிகமான காரணத்தினார் நம்பர் பிளேட் இல்லாமல் காரில் வந்ததாக போக்குவரத்து காவலர்களிடம் விளக்கம் கொடுத்துள்ளார்.

கலைமாமணி விருதுகள்: விசாரணை நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவு!

இருப்பினும், காரில் நம்பர் பிளேட் இல்லாமல் வந்தது மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் படி குற்றம் என்பதால் டி.டி.எஃப் வாசன் வந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.