அரசு மருத்துவமனையில் பயங்கரம்: பெயிண்டரை வெட்டி சாய்த்த கொடூரம்!!

சேலம் மாவட்டம் மேட்டூரில் அரசு மருத்துவமனைக்குள்ளே புகுந்து ஒருவரை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் அடுத்த தொட்டில் பட்டியை சேர்ந்தவர் பெயிண்டர் ரகு. பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தீபாவளி நாளில் அதே பகுதியை சேர்ந்த வெள்ளையன், மூர்த்தி, பிரகாஷ் ஆகியோருக்கு முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வாட்ஸ் அப் சேவை முடக்கம்: மெட்டா பரபரப்பு விளக்கம்!

இதில் காயமடைந்த ரகு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். அவரை பின்தொடர்ந்து வந்த கும்பல் அரசு மருத்துவ மனைக்குள் புகுந்து ரகுநாதனை வெட்டிக்கொன்றனர்.

இதனால் மருத்துவ மனையில் இருந்த செவிலியர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அலறிஅடித்துக்கொண்டு வெளியே ஓடினர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கொலையாளிகள் விட்டுச்சென்ற 2 மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர்.

உஷாரா இருங்க!! இன்று 18 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை அப்டேட்!!

மேலும், கொலை சம்பவம் தொடர்பாக வெள்ளையன், மூர்த்தி, பிரகாஷ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment