Connect with us

’தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் இருக்க தகுதி இல்லை ’ – நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!

TRB

Tamil Nadu

’தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் இருக்க தகுதி இல்லை ’ – நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!

’தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் இருக்க தகுதி இல்லை ’ – நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர்கள்  பணியில் நீடிக்க தகுதியில்லை என்றும் தகுதித்தேர்வு அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்கள் ஊதிய உயர்வு பெற உரிமை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் தகுதித் தேர்வில் குறைந்த பட்சம் 60%  மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வில்லை என்றால் அவர்களுடைய வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி வைக்க தமிழக பள்ளிக்கல்விதுறை உத்தரவிட்டுள்ளது.

இதனை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் 12 ஆண்டுகள் ஆகியும் இவர்கள் தேர்ச்சி பெறாத காரணத்தினால் இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கு உரிமையில்லை என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

அதே சமயம் ஆசிரியர்கள் தரப்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது ஆண்டுதோறும் நடத்தப்படுவது இல்லை . தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவு படி ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உத்தரவிட்டும் 12 ஆண்டுகள் தேர்ச்சி பெறாத காரணத்தினால் இந்த வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத  ஆசிரியர்கள்  பணியில் நீடிக்க தகுதியில்லை என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top