வரலாறு காணாத நவம்பர் மழை: 1918-ன் சாதனையை முறியடிக்குமா 2021 மழை?

தேங்கிய மழைநீர்

தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் நிகழ்கிறது. இவை இயல்பை விட சற்று தீவிரமாகவே காணப்படுகிறது. ஏனென்றால் கடந்த சில நாட்களிலேயே வரலாறு காணாத அளவிற்கு தமிழகத்தில் மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மழை

குறிப்பாக இந்த நவம்பர் மாதம் மட்டும் வரலாறு காணாத மழைப்பொழிவை பெற்றுள்ளதாக இந்த ஆண்டு அமைந்துள்ளது. அதன்படி சென்னையில் நவம்பர் முதல் 11 நாட்களிலேயே வரலாறு காணாத வகையில் மழை கொட்டித் தீர்த்தது.

குறிப்பாக நுங்கம்பாக்கத்தில் பதிவான அளவின்படி சென்னையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை 70.9 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. 1918 ஆம் ஆண்டு சென்னையில் நவம்பர் மாதத்தில் மட்டும் 108.8 சென்டிமீட்டர் மழை பெய்தது தான் தற்போது வரை சாதனையாக இருந்தது.

வடகிழக்கு பருவமழை

2005இல் 103.8 சென்டி மீட்டர் மழையும், 2015இல் 104.9 சென்டிமீட்டர் மழையின் அளவும் நவம்பர் மாதத்தில் சென்னையில் பெய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் நவம்பரில் 100 சென்டி மீட்டருக்கும் அதிகமான மழை 1918,1985, 2005 மற்றும் 2015 ஆகிய நான்கு ஆண்டுகளில் மட்டுமே நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவதற்கு இன்னும் 19 நாட்கள் உள்ள நிலையில் தற்போது 70.9 சென்டிமீட்டர் மழை கிடைத்துவிட்டது, இதனால் மீதமுள்ள 19 நாட்களில் நிச்சயம் 30 சென்டி மீட்டருக்கும் அதிகமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print