ஆளுநரின் எண்ணம் இதுதானா? தனக்கிருக்கும் கடமையை செய்யாமல் அவசியமற்ற அரசியலா?
ஆளுநரின் ஒவ்வொரு செயலும் தமிழக அரசுக்கு முட்டுக்கட்டையாக காணப்படுகிறது, இது குறித்து முரசொலி கருத்துக் கூறியுள்ளது. அதன்படி தனக்கிருக்கும் கடமையை செய்யாமல் தமிழக ஆளுநர் அவசியமற்ற அரசியல் செய்து கொண்டு வருகிறார் என்றும் கூறியுள்ளது.
நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் காலநிர்ணயம் சொல்ல மறுத்து பற்றி விமர்சனம் செய்துள்ளது. ஒருவேளை தமிழக பாஜகவின் தலைமை பொறுப்பை தானே இருக்கலாம் என நினைக்கிறார் என்று முரசொலி கூறியுள்ளது.
பாஜகவுக்கு தமிழகத்தில் இருக்கும் ஒற்றையான ஓட்டுகளை ஆளுநர் உலை வைக்க முடிவு எடுத்துவிட்டாரா என்றும் முரசொலி நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது. யாரோ சிலரால் தவறாக வழிநடத்தப்படும் ஆளுநர் ரவி என்பது மட்டும் நல்ல தெளிவாக தெரிகிறது என்று முரசொலி நாளிதழ் நிறுவனம் கூறியது. தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி ஆகும்; அதை புரிந்தும் தெளிந்தும் செயல்படவேண்டும் என்றும் முரசொலி கூறியுள்ளது.
