நீட் தேர்வு தேதியை அறிவித்த மத்திய அமைச்சர்: தமிழக மாணவர்கள் அதிர்ச்சி!

0879a63909791a0405a552d4cae4475a-1

இந்த ஆண்டு நீட் தேர்வு தமிழகத்திற்கு இருக்காது என்றும் நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என்றும் திமுக அரசின் அமைச்சர்கள் கூறிவந்த நிலையில் மத்திய அமைச்சர் சற்றுமுன் நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது தமிழக மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே நீட் தேர்வை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம் என்று கூறியதால், மாணவர்கள் நுழைவுத் தேர்வுக்கு தயாராவதா? அல்லது வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தனர் 

இந்த நிலையில் சற்று முன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது டுவிட்டரில் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்றும் நாளை முதல் மாணவர்கள் நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தை தேசிய தேர்வு முடிவு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார். இதனையடுத்து இன்று ஆண்டு நீட் தேர்வு நாடு முழுவதும் உண்டு என்பது உறுதியாகி உள்ளது

இதனால் தமிழக மாணவர்களும் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீட் தேர்வு குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் கூறியபோது ’நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராவது தவறு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment