யாதும் ஊரே யாவரும் கேளிர், வேற்றுமையில் ஒற்றுமை, மதசார்பற்ற இந்தியா என்றுதான் முன்னொரு காலத்தில் வாழ்ந்தவர்கள் இருந்தார்கள். ஆனால் காலங்கள் செல்ல செல்ல பிரிவினைகள் அதிகமாக உருவானது.
குறிப்பாக மாநிலங்களுக்கிடையே மொழி பிரிவினை மற்றும் ஜாதிய பிரிவினைகள் தலைதூக்கியது. இருப்பினும் ஆங்காங்கே பல மாநிலங்கள் இடையே நட்புறவு இன்றளவும் நிகழ்ந்து கொண்டுதான் வருகிறது.
இந்தியா என்பது சுற்றிலும் உள்ள அனைத்து மாநிலங்களின் ஒன்றியம் ஆகவே கருதப்படுகிறது. இதுபற்றி காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கருத்து கூறியுள்ளார். அதன்படி ஒன்றியமே இந்தியாவின் பலம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கருத்து கூறியுள்ளார்.
நம்முடையது கலாச்சாரங்களின், பன்முகத்தன்மையின், மொழிகள், மக்களின் ஒன்றியம், மாநிலங்களின் ஒன்றியம் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, குஜராத் முதல் மேற்கு வங்கம் வரை இந்தியா அனைத்து வண்ணங்களிலும் அழகாக திகழ்கிறது என்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார். ஒன்றியங்களின் ஒற்றுமை உணர்வை அவமதிக்காதீர்கள் என்று ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.