ஒன்றிய அரசின் அம்ருத் 2.0 திட்டம்: தமிழகத்திற்கு அநீதி !! வெளிச்சத்திற்கு வந்த தகவலால் பரபரப்பு…
ஒன்றிய அரசின் அம்ருத் 2.0 திட்டத்தில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்திற்கு மட்டும் மிக குறைவாக நிதி ஒதுக்கப்பட்டு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வசதியை நோக்கமாகக் கொண்டு அம்ருத் என்ற நகர்புற மாற்றத்திற்காக ஒன்றிய அரசின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்காக தமிழகத்திற்கு ரூ. 4756 ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அம்ருத் 2.0 திட்டத்திற்கு மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டிற்கு நிதி பெரும் அளவு குறைக்கப்பட்டுள்ளதை குறித்து மாநிலவையில் திமுக எம்.பி வில்சன் கேள்வியெழுப்பினார்.
தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டு இருப்பதாகவும், மாநிலங்களுக்கு இடையேயான பாரபட்சமான ஒதுக்கீடு குறித்து விளக்கம் அளிக்குமாறு அவர் வலியுறுத்தினார். இதற்கு எழுத்து பூர்வமாக விளக்கம் அளித்த ஒன்றிய அரசு.
அம்ரூத் திட்டத்தில் நகர்புறங்களுக்கு ஏற்றவாறு மாநிலங்களுக்கு 50:50 என்ற விகிதத்தில் ஒன்றிய அரசு ரூ. 35, 990 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததாகவும் தமிழகத்திற்கு ரூ. 4,756 நிதி ஒதுக்கீயதாக தெரிவித்துள்ளது.
ஆனால் அம்ருத் 2.0 திட்டத்தில் நகர்புற மக்கள் தொகையில் 90:10 என்ற விகிதத்தில் ரூ. 66,750 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததாகவும் அதில் தமிழகத்திற்கு ரூ. 4,935 ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தை காட்டிலும் நகர்புற மாநிலங்களில் மக்கள் தொகை குறைவாக இருக்கும் பட்சத்தில் 2 மடங்கு அதிகமாக நிதி வழங்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்ததாக பி. வில்சன் கூறியுள்ளார்.
