தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் – தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில், தேர்வு நடைபெறும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின் வாரியத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக மாணவர்கள் தேர்வு எழுதும் போது மின்வெட்டு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் டிரான்ஸ்பார்மர் உள்ளிட்டவற்றில் கோளாறுகள் இருந்தால், அவற்றை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சை பேச்சு; மூத்த பத்திரிகையாளர் மீது அதிமுக முன்னாள் அமைச்சர் போலீசில் புகார்!

12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 13ஆம் தேதியும், 11ஆம் வகுப்புக்கு மார்ச் 14ஆம் தேதியும், 10ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதியும் தொடங்கும் என தகவல் கிடைத்துள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.