உங்கள் வீட்டில் அடைந்து கிடக்கும் மூதேவியை அடித்து விரட்ட இந்த தண்ணீர் போதும்..

வெற்றிலை, பாக்கு இல்லாமல் தினசரி பூஜை நிறைவடையாது. முன்பெல்லாம் வீடுகளில் துளசி, கற்பூரவல்லி, தூதுவளை வெற்றிலை மாதிரியான மூலிகைகள் இருப்பது வழக்கம். இப்பொழுது இரண்டு வெற்றிலை ஒரு பாக்கின் விலை 2 ரூபாய். அதனால், தினமும் வெற்றிலை வைத்து வழிபடும் வழக்கம் வழக்கொழிந்து வருகின்றது. எதாவது விசேச தினங்களில் மட்டுமே வெற்றிலை வைத்து வழிபடுவது இன்றைய வழக்கமாக உள்ளது. வெற்றிலை பூஜைக்கு மட்டுமல்லாமல் உடல்நலக்கோளாறுகளை நீக்கும் சக்தி கொண்டவை.

தினமும் வெற்றிலையை வைத்து இறைவனை வழிபடுவதால் பல நன்மைகள் உண்டாகின்றது. மேலும் வெற்றிலையை நீரில் போட்டு வழிபடும்போது மேலும் அதிக பலன்களை கொடுக்கின்றது.

உடல், மனத்தூய்மையோடு வீட்டையும் சுத்தப்படுத்தி வெள்ளிக்கிழமை காலை தூய்மையான பித்தளை அல்லது செம்பு டம்ப்ளரில் முக்கால்வாசி தண்ணீர் ஊற்றி அதில் நன்னாரி வேரி 2 துண்டு, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, பச்சைகற்பூரம் ஒரு சிறிய துண்டு, ஜவ்வாது தூள் ஒரு சிட்டிகை சேர்த்து கலக்கி, நறுமணம் மிக்க இந்த தண்ணீரில், தண்ணீரின்மேல் வெற்றிலைக்காம்பு இருக்கும்படி, வெற்றிலை ஒன்றை தண்ணீரில் மூழ்க வைத்து விடுங்கள். மகாலட்சுமி தாயாரின் முன்பு வைத்து பூஜை செய்ய வேண்டும்.

மாலை பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து , அந்த சொம்பில் இருக்கும் தீர்த்தத்தை எடுத்து, அந்த வெற்றிலையினால் உங்கள் வீட்டு மூலைமுடுக்குகளில் தெளிக்க வேண்டும்.
சமையலறை, படுக்கையறை வரவேற்பறைஎன வீட்டில் உள்ளா அனைத்து அறைகளிலும் இந்த தண்ணீரை தெளிக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் மூதேவி உங்கள் வீட்டில் வாசம் செய்யவே மாட்டாள். நறுமணமிக்க இந்த தீர்த்தமானது வீட்டில் சந்தோஷத்தை நிலையாக வைத்திருக்கும். பணக்கஷ்டம் ஏற்படாது. மனக்கஷ்டம் ஏற்படாது. சண்டை சச்சரவு ஏற்படாது. நோய் நொடிகள் இல்லாத வளமான வாழ்க்கையை வாழ இந்த வெற்றிலை தண்ணீர் உதவும்.

நம்புங்கள்! நல்லதே நடக்கும்!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.