உங்க வீட்டில் எப்போதும் செல்வம் நிலைத்திருக்க வேண்டுமா?! இந்த மந்திரத்தினை சொல்லுங்க!!

மனிதனாய் பிறந்த அனைவரது ஆசையும் தங்கு தடையின்றி எல்லா நாளிலும் அவரவர் வசதிக்கேற்ப செல்வம் தங்கள் கையில் இருக்க வேண்டுமென்பதே! செல்வத்திற்கு அதிபதியான மகா லட்சுமியை எவர் ஒருவர் வழிபடுகிறார்களோ அவர்களது வீட்டில் நிச்சயம் செல்வம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் லட்சுமியை வழிபடுகையில் கூறவேண்டிய லக்ஷ்மி மூல மந்திரம் இதோ.

d7656ef0101d63feec0a50530c8d2a35

மகாலட்சுமி மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி

மஹாலக்ஷ்மி ஏய்யேஹி

ஏய்யேஹி சர்வ

ஸௌபாக்யம் மே தேஹி ஸ்வாஹா

மந்திரம் சொல்லும் முறை…

இந்த மூல மந்திரத்தை ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமையில் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி படத்தை தூய்மை செய்து, அப்படத்திற்கு பொட்டிட்டு, பூக்கள் சமர்ப்பித்து, நெய் தீபமேற்றி, சர்க்கரை கலந்த பசும்பால் நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும். பிறகு இந்த மூல மந்திரத்தை 108 முறை 1008 முறை துதித்து வழிபட வேண்டும். தினமும் காலையில் குறைந்த பட்சம் 16 முறை இந்த லட்சுமி மூல மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். மந்திரஜபம் காலத்தில் கோபப்படுதல், சத்தமாகப் பேசுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மேற்கூறிய மந்திரத்தை பாராயணம் செய்து வருபவர்களுக்கு மகாலட்சுமியின் கடாட்சம் கிடைக்க பெற்று செல்வ சேர்க்கை அதிகரிக்கும். தினசரி மற்றும் மாத வருமானம் பெருகும். தொழில், வியாபாரங்களில் லாபங்கள் அதிகரிக்கத் தொடங்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.