உங்க பூஜையறையை அழகாகவும், தெய்வாம்சம் மிக்கதாகவும் இருக்கனுமா? – பூஜையறை டிப்ஸ்

வீட்டின் எல்லா இடங்களையும் பூஜையறை போன்று சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். எல்லா இடங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள எத்தனையோ டிப்ஸ் இருப்பதுப்போல் பூஜையறையை சுத்தமாகவும், அழகாகவும், தெய்வாம்சம் பொருந்தியதாகவும் வைத்திருக்க சில டிப்ஸ்கள் இருக்கின்றது…

பூக்கட்ட உதவும் நூல் அல்லது வாழை நாரை காலி சோப்பு அட்டைப்பெட்டி அல்லது காலி ஊதுவத்தி அட்டைப்பெட்டிகளில் போட்டு வைத்து கனகாம்பரம், சாமந்தி மாதிரியான வாசனை இல்லாத பூக்களை கட்டும்போது வாசமாக இருக்கும். இதைத்தான் நாரோடு சேர்ந்த பூவும் மணக்கும்ன்னு சொல்வாங்க.

எரிந்து மிச்சமிருக்கும் ஊதுவத்தி குச்சிகளை சேமிச்சு வைத்தால், காம்பில்லாத சாமந்தி, ரோஜா மாதிரியான பூக்களை ஊதுவத்தி குச்சியில் செருகி, சுவாமி படத்தில் வைக்கலாம்.

பூஜைப்பொருட்கள் இரும்பில் இருப்பதை தவிர்ப்பது நலம். ஏனெனில் இரும்பு எமனுக்கு சொந்தமானது. செம்பு, ஈயம் பூசிய பித்தளை, வெள்ளி, மண்ணால் ஆன பொருட்களை பயன்படுத்துவது நற்பலன் கிடைக்கும்.

டீ, காபி வைக்கும் கோஸ்டர்கள்மீது அகல்விளக்கினை ஏற்றி வைத்தால் தரையில் எண்ணெய் கறை படாது.

கற்பூரத்தோடு சில மிளகுகள் போட்டு வைத்தால் கற்பூரம் கரையாமல் இருக்கும்.

பூஜையறை, மற்ற அறை சுவர்களில் மயிலிறகை ஒட்டினால் பல்லி தொல்லை இருக்காது. மேலும் தேவதைகளை ஆகர்ஷணம் செய்யும் சக்தி மயிலிறகிற்கு உண்டு.

f91a57c6eb053287c822f19cb2714733

முதல்நாள் சுவாமி படங்களுக்கு வைத்த ரோஜா, செம்பருத்தி பூக்களை தூக்கி எறியாமல் காயவைத்து சீயக்காயோடு சேர்த்து அரைத்தால் மணமாகவும், கூந்தல் ஆரோக்கியத்திற்கும் உதவும்.

வெளியூருக்கு செல்லும்போது பூஜையறையில் சுவாமி படங்களுக்குமுன் ஒரு கிண்ணத்தில் அரிசி-துவரம் பருப்பு, மறு கிண்ணத்தில் நல்ல தண்ணீரையும் வைத்து விட்டுச் செல்ல வேண்டும். தெய்வங்களை பட்டினி போடக்கூடாது என்பது ஐதீகம்.

பாத்திரம் கழுவ உதவும் லிக்விட் சோப் தீர்ந்தபின் அந்த பாட்டிலில் விளக்கேற்ற உதவும் எண்ணெயை ஊற்றி வைத்துக் கொண்டால் விளக்குகளுக்கு சிந்தாமல் எண்ணெய் ஊற்றலாம்.

அடுக்களையில் மிளகு, சீரகம், கடுகு போட்டு வைத்திருக்கும்அஞ்சறைப் பெட்டியில் மஞ்சள்தூள், குங்குமம், அட்சதை, கற்பூரம், வாசனைப்பொடி, தீப்பெட்டி போன்றவற்றை போட்டு வைத்தால் இடம் அடைக்காமல் இருக்கும். பார்க்க அழகாகவும் இருக்கும்.

பூஜையறையில் ஒரே அளவுள்ள படங்களை மாட்டினால் பார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் எளிதாக இருக்கும்.

பூஜையறை டிப்ஸ் தொடரும்…

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.