News
மே மாதத்தில் வேலைவாய்ப்பின்மை: டெல்லி முதலிடம்! தமிழகம் மூன்றாம் இடம்!
நம் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் முழு ஊரடங்கு தற்போது வரை அமல் படுத்தப் பட்டுள்ளன. காரணம் என்னவெனில் கடந்த ஆண்டு இந்தியாவில் இதேபோன்று முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டன. ஏனென்றால் கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா நோயின் தாக்கம் வரத்தொடங்கி கடந்தாண்டு கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த நோய் பரவ தொடங்கியது. இதனால் பல மாநிலங்களில் இந்த நோயை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல் படுத்தப் பட்டன.
இதன் விளைவாக நம் தமிழகத்திலும் முதல் இரண்டு வாரங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தப் பட்டன. அதன்பின்னர் மூன்றாம் வாரம் ஆனது எத்தகைய தளர்வுகளுக்கும் அனுமதியின்றி கடுமையாக போடப்பட்டது. தற்போது தமிழகத்தில் நான்காவது வாரமாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளது இதனால் கடந்த மே மாதம் மட்டும் இந்திய அளவில் வேலைவாய்ப்பின்மை யானது மிகவும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்தியாவில் மே மாதம் மட்டும் 11 சதவீதத்துக்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பு இன்றி தவிக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
அதன்படி இந்தியாவில் டெல்லி மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை யில் முதலிடம் வகிப்பதாக கூறபடுகிறது. அங்கு 45.6 சதவீதம் பேர் வேலை வாய்ப்பின்றி தவிக்கின்றனர். அதைத்தொடர்ந்து ஹரியானாவில் 29.1 சதவீதம் பேர் வேலை வாய்ப்பின்றி மூன்றாமிடத்தில் நம் தமிழக 28 சதவீதத்துடன் வேலை வாய்ப்பின்றி தவிக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஏப்ரல் மாதத்தில் 2.3 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை அல்லது மே மாத இறுதியில் 28 சதவீதமாக நம் தமிழகத்தில் உயர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
