உணவு பஞ்சம் நம்மை அண்டாதிருக்க அன்னப்பூரணி மூலமந்திரம்…

a7cb8156ada1e0927dd2fe659c57886c-1

எல்லா உயிர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு புள்ளி யாதெனில் பசி ஒன்றே! பசி என்ற உணர்வை பிணி என நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். பசி வந்தால் கௌரவம்,பதவி, அச்சம் என எதும் செல்லாது. பசிப்பிணியை போக்க வயிறார உண்பதே தீர்வாகும். பசிப்பிணியை போக்கும் அன்னம் எனும் உணவு ஒருவருக்கு வாழ்நாள் முழுக்க தங்கு, தடையில்லாமல் கிடைக்க அருள் புரியும் தெய்வம் ஸ்ரீ அன்னபூரணி தேவி ஆகும். அந்த அன்னபூரணி தேவியின் அருளை தருகின்ற அன்னபூரணி மூல மந்திரம் இதோ.

மந்திரம்:

ஓம் ஐம் ஹ்ரீம் ஷ்ரீம் க்ளீம் அன்னபூர்ணாய நமஹ

இந்த மந்திரத்தினை தை தினமும் காலையில் 108 முறை சொல்வது நல்லது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அன்னபூரணி தேவிக்கு காலையில் சமைத்த உணவை நைவேத்தியம் வைத்து அன்னபூரணி மூல மந்திரத்தை 108 முதல் 1008 முறை வரை துதித்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் என்றென்றும் உணவிற்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் இருக்கின்ற தரித்திர நிலை முற்றிலும் நீங்கும். பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தில் திருமணம் தடை தாமதங்களுக்கு ஆளாகின்ற ஆண்களுக்கும், பெண்களுக்கும் விரைவில் திருமணம் நடக்கும். 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...