அங்கீகரிக்கப்படாத பத்திரப்பதிவு – ஐகோர்ட் கிளை எச்சரிக்கை!!

தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்படும் நிலை தொடர்ந்தால் துறை செயலாலர் ஆஜராக நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேனி அடுத்த வீரபாண்டி சேர்ந்தவர் சரவணன். இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளை மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி பகுதிகளில் அரசிடம் முறையாக அனுமதி பெறாத மனைகளை சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்வதாக கூறியுள்ளார்.

உரிய அங்கீகாரம் பெற முடியாத மனைகளை மோசடியாக மக்களிடம் விற்பனை செய்வது மட்டுமில்லாமல், அரசுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி வருவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும் கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை அமர்வு இன்று வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் அங்கீகரிக்கப்படாத பத்திர பதிவு செய்த அதிகாரி உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என கூறினார்.

இந்நிலையில் அவர் மீதான வழக்கு விசாரணையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதி வழக்கு விசாரணையை செப்டம்பர் 22-ம் தேதிக்கு ஒத்துவைத்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.