நீட் தேர்வுக்கு கட்டணம் செலுத்த முடியவில்லையா? பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு!

0879a63909791a0405a552d4cae4475a-1

நீட் தேர்வு கட்டணம் செலுத்த முடியாதவர்களின் பட்டியலை வரும் 27ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது

இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் நீட் தேர்வு பயிற்சி பெறும் அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் நீட் தேர்வில் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீட் தேர்வுக்கான கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து அல்லது உறவினர்கள் மூலமாக கட்டணத்தை செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது.

மேலும் எந்த வகையிலும் கட்டணம் செலுத்த முடியாதவர்களின் பட்டியலை வரும் 27ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. மேலும் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து அலகுத்தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment